Wednesday, March 12, 2008

Localization / Localisation - தமிழ்ப் பதம் என்ன?

Localization / Localisation என்பதற்குப் பின்வரும் தமிழ்ப் பதங்களை நாம் கவனத்திற் கொள்ளலாம் :
1. குழுமயப்படுத்தல்
2. உள்ளூராக்கல்

Localization / Localisation எனப்படுவது, இடம், மொழி, கலாசாரம், பண்பாடு... போன்ற எல்லாவற்றையும் உள்ளடக்கியதான செயற்பாடு. எனவே ஒரு இடத்தை வைத்தோ, மொழியை வைத்தோ Localization / Localisation இற்கான தமிழ்ப் பதத்தை வரையறுக்க முடியாது. பொதுவாகச் சொல்வதானால், Localization / Localisation என்பது ஒரு குழுவிற்காக ஒரு மென்பொருளை மாற்றுவதென்று பொருள்கொள்ளலாம். இக்குழு, ஒரு நாடாகவோ அல்லது ஒரு கிராமமாகவோ இருக்கலாம்.
அதனால், Localization / Localisation என்பதற்கு குழுமயப்படுத்தல் என்ற பதம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
பொதுவாக இந்த Localization / Localisation, குறித்த மொழியின் கலைச்சொற்களஞ்சியத்தினை அடிப்படையாகக் கொண்டே செய்யப்படுகின்றன.
இலங்கை மற்றும் இந்தியாவை எடுத்துக்கொண்டால், வெவ்வேறு கலைச்சொற் களஞ்சியங்கள் புழக்கத்திலுள்ளன. எனவே தமிழ் மொழியைப் பொறுத்தவரையில் இலங்கை மற்றும் இந்தியாவிற்காக வெவ்வேறான Localization / Localisation அவசியமாகிறது.

3 comments:

மு. மயூரன் said...

சிக்கலான சொல்தான்.

இலங்கை அரசகரும மொழிகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அகரமுதலியில் local என்பதற்கு "இடத்துரி" என்று மொழியாக்கம் வழங்கப்பட்டுள்ளது.

இடத்துரி வழக்கு, இடத்துரித்தாக்கம், என்று பயன்படுத்தலாமோ என்னவோ..

கலைச்சொல் தொடர்பான உரையாடல்களுக்கு நீங்களும் உங்கள் பல்கலைக்கழக மொழியாக்கக்குழுவினரும் விக்சனரி மடலாடற்குழுவில் இணைந்துகொள்வீர்களானால் பலருக்கும் அது பயன்படும்.

அத்தோடு உங்களிடமிருந்து ஏனைய தமிழ் இணைய மொழியாக்குநர்களும் அவர்களிடமிருந்து நீங்களும் பலவற்றை பகிர்ந்துகொள்ளவும் முடியும்.

குழுமத்தில் இணைந்துகொள்ள,

http://groups.google.com/group/tamil_wiktionary

Sarves said...
This comment has been removed by the author.
Sarves said...

நன்றி மயூரன்...
நான் ஏற்கனவே சொல்லியதுபோல், Localization / Localisation என்பது இடத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல.
நீங்கள் எடுத்துள்ள இலங்கை அரச கரும மொழிகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அகரமுதலி / கலைச்சொற்களஞ்சியம் இல் சில சிக்கலான மொழிபெயர்ப்புகள் உள்ளன என்பதை என்னால் சொல்லாமல் இருக்கமுடியவில்லை.
நாம் இப்போது அவற்றை மீள்பார்வைக்குட்படுத்தி வருகிறோம்.