Saturday, March 22, 2008

இலங்கைத் தமிழ் மொழிக்கட்டுக்கள்

Localization / Localisation ஐப் பொறுத்தவரையில் கலைச்சொற்களஞ்சியங்கள் பிரதான பங்கு வகிக்கின்றன. கலைச்சொற்களஞ்சியங்களின் அடிப்படையிலேயே இந்த Localization / Localisation செய்யப்படவேண்டும் / செய்யப்படுகிறது.
தமிழுக்கான கலைச்சொற்களஞ்சியங்கள் இலங்கை மற்றும் இந்தியாவில் கலாந்தொட்டுத் தனித்தனியாகவே வெளியிடப்பட்டு வருகின்றன. அதாவது இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், தமிழ்-கணினி ஆன கலைச்சொற்களஞ்சியங்கள் தயாரிக்கப்படுகின்ற அதேவேளை, இலங்கையிலும் தனியான தமிழ்-கணினி கலைச்சொற்களஞ்சியம் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இலங்கையில் 2000 ஆம் ஆண்டு முதன் முதலில் இந்திய மற்றும் இலங்கை அறிஞர்கள் கூட்டு சேர்ந்து ஒரு தமிழ்-கணினி கலைச்சொற்களஞ்சியத்தை வெளியிட்டனர். இக்கூட்டுத்தயாரிப்பில் கூடப் பல சொற்களுக்கு இந்திய வழக்கு, இலங்கை வழக்கு என்று தனித்தனியாக மொழிபெயர்ப்புகள் தரப்பட்டுள்ளன.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது, இலங்கையில் பயன்படுத்தப்படும் தமிழ்ச்சொற்கள் தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படும் தமிழ்ச்சொற்களிலிருந்து வேறுபட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.

இதன்அடிப்படையில் நாம் மென்பொருள்களிலும் இலங்கைத் தமிழுக்காகத் தனியானதொரு மொழிக்கட்டை சேர்க்கவேண்டும் என்பது புலனாகிறது. அத்தோடு அவற்றுக்கான பல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த இலங்கைத் தமிழ் மொழிக்கட்டுக்கான நியம பெயர் : ta-LK / ta_lk

இன்று :
Joomla 1.5.2
Moodle 1.8+
Mozilla Firefox
Mozilla Thunderbird
ஆகியவற்றுக்கான இலங்கைத் தமிழ்மொழிக்கட்டுகள் கிடைக்கக்கூடியதாக இருக்கின்றன. இந்த மொழிக்கட்டுகளின் தயாரிப்பில் நானும் பங்குபற்றியிருக்கிறேன் என்பதைப் பெருமையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
இனிவருங்காலங்களில் நாம் மேலும்பல மென்பொருள்களை இலங்கைத் தமிழ் மொழிக்கட்டுடன் எதிர்பார்க்கலாம். யாராவது இம்முயற்சியில் ஈடுபட விரும்பின் என்னாலான பங்களிப்பை செய்யவும் தயாராக இருக்கிறேன்.

No comments: