Wednesday, July 2, 2008

தமிழில் Firefox 3.0

இப்போது நீங்கள் Firefox 3.0 ஐத் தமிழில் பயன்படுத்தலாம். அதற்கான மொழிக்கட்டை நீங்கள் https://addons.mozilla.org/en-US/firefox/addon/6651 தளத்திலிருந்து பதிவிறக்கிக்கொள்ளலாம். இது சம்பந்தமான வேலைகள் இன்னமும் நடந்துவருவதால், உங்களின் ஆரோக்கியமான கருத்துக்கள் வளஞ்சேர்க்கும்.
சில இடங்களில் எழுத்துப்பிழைகள் உள்ளன, விரைவில் நாம் அதனைச் சரிசெய்துவிடுகிறோம்.

Monday, June 30, 2008

தமிழிலான இணைய முகவரிகள்

நாம் தமிழில் URL ஐ (IDN) அறிமுகப்படுத்துவதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறோம். இதன் முதல் அங்கமாக, '.lk' என்பதை எப்படித் தமிழில் எழுதலாம் என்பதில் கவனஞ்செலுத்தி வருகிறோம்.
நாம் யோசித்தளவில்
1.இல
2.இலங்கை
3.இகை போன்றவை கிடைத்திருக்கின்றன. நாம் இவற்றில் இருந்து ஏதாவது ஒன்றைத் தெரிவுசெய்யவேண்டிய கட்டாயத்தில் இன்று இருக்கிறோம்.

இதுதொடர்பாக உங்களின் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறோம். நீங்கள் மேற்குறிப்பி்ட்ட மூன்றில் எதனைத் தெரிவுசெய்வீர்கள்? அல்லது அவற்றைவிடச் சிறந்த வேறு ஏதாவது ஒன்றை முன்மொழிய முடியுமா?
நாம் இதனைத் தீர்மானிப்பதற்கு 2 விடயங்களைக் கவனத்தில் கொண்டால்போதும்.

1. அச்சொல்லு 6 Key strokes க்கும் குறைவானதாக இருக்கவேண்டும் (Unicode வடிவத்தில்). உதாரணமாக, இலங்கை = இ ல ங ் ​​ை க = 6
2. ஈழம் என்ற சொல் தவிர்க்கப்படவேண்டியதாயிருக்கிறது (ஏன் என்று என்னை வையாதீர்கள் :-( )

உங்களுடைய தாழ்மையான ஆலோசனைகளை விரைவாக எதிர்பார்க்கிறோம். கருத்துக்களுக்கு மொழி தடைவில்லை, நீங்கள் ஆங்கிலத்திலும் எழுதலாம்.

/சர்வேஸ்

Sunday, June 22, 2008

தமிழிலான Firefox 3.0

நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கலாம், Firefox 3.0 Beta 2 பதிப்பிற்கான தமிழ் மொழிக்கட்டை Mozilla.org AMO (https://addons.mozilla.org/en-US/firefox/browse/type:3) இல் இலங்கைத் தமிழ் என்ற பகுதியிலிருந்து பதிவிறக்கிக்கொள்ளலாம். இன்று Firefox 3.0 இற்கான இறுதிப் பதிப்பிற்கான மொழிக்கட்டு வேலைகளும் ஒரளவு நிறைவுற்றிருக்கின்றன. அதனை இன்றும் இரண்டு நாட்களுக்குள் மேற்தரப்பட்ட இணைப்பினூடாகப் பெறலாம்.
Firefox 3.0 ஆனது இணைய உலாவிகள் மத்தியில் ஒரு பெரிய எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்பதில் இவ்வித ஐயமுமில்லை. இந்த இலவச திறந்த மூல மென்பொருள் இன்று பெரும்பாலன நாடுகளில் வரவேற்பைப் பெற்றுக்கொண்டுள்ளது.

Sunday, June 8, 2008

Joomla! 1.5.x மொழிக்கட்டு

Joomla! 1.5.x இற்கான Localization நிறைவடைந்துள்ளது. அதனை நீங்கள் இப்போது http://joomlacode.org/gf/project/j_l10n_ta_lk/ தளத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

Joomla! 1.5.x இற்கான
1. நிர்வாகம் (administration)
2. தளம் (site)
3. நிறுவல் (installation) போன்றவற்றிற்குத் தேவைப்படும் மொழிக்கட்டுகள் அனைத்துமே நிறைவடைந்துள்ளன.
நிறுவலுக்கான மொழிக்கட்டு Joomla! 1.5.x உடன் பெற்றுக்கொள்ளலாம்.
தளம் மற்றும் நிர்வாகத்திற்கான மொழிக்கட்டுகளை நீங்கள் மேலே தரப்பட்டுள்ள இணைப்புத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.


இது சம்பந்தமான உங்களின் ஆக்கபூர்வமான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

Saturday, April 12, 2008

வரும் ஆண்டாவது வழிசெய்யட்டும்!









வரும் ஆண்டாவது

புத்தாண்டாக அமையட்டும்!

விதியைநொந்து நொந்து

புரட்டிய நலிய வாழ்க்கை ஒழிய

வரும் ஆண்டாவது

புதிய வழிசெய்யட்டும்!


Saturday, March 22, 2008

இலங்கைத் தமிழ் மொழிக்கட்டுக்கள்

Localization / Localisation ஐப் பொறுத்தவரையில் கலைச்சொற்களஞ்சியங்கள் பிரதான பங்கு வகிக்கின்றன. கலைச்சொற்களஞ்சியங்களின் அடிப்படையிலேயே இந்த Localization / Localisation செய்யப்படவேண்டும் / செய்யப்படுகிறது.
தமிழுக்கான கலைச்சொற்களஞ்சியங்கள் இலங்கை மற்றும் இந்தியாவில் கலாந்தொட்டுத் தனித்தனியாகவே வெளியிடப்பட்டு வருகின்றன. அதாவது இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், தமிழ்-கணினி ஆன கலைச்சொற்களஞ்சியங்கள் தயாரிக்கப்படுகின்ற அதேவேளை, இலங்கையிலும் தனியான தமிழ்-கணினி கலைச்சொற்களஞ்சியம் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இலங்கையில் 2000 ஆம் ஆண்டு முதன் முதலில் இந்திய மற்றும் இலங்கை அறிஞர்கள் கூட்டு சேர்ந்து ஒரு தமிழ்-கணினி கலைச்சொற்களஞ்சியத்தை வெளியிட்டனர். இக்கூட்டுத்தயாரிப்பில் கூடப் பல சொற்களுக்கு இந்திய வழக்கு, இலங்கை வழக்கு என்று தனித்தனியாக மொழிபெயர்ப்புகள் தரப்பட்டுள்ளன.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது, இலங்கையில் பயன்படுத்தப்படும் தமிழ்ச்சொற்கள் தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படும் தமிழ்ச்சொற்களிலிருந்து வேறுபட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.

இதன்அடிப்படையில் நாம் மென்பொருள்களிலும் இலங்கைத் தமிழுக்காகத் தனியானதொரு மொழிக்கட்டை சேர்க்கவேண்டும் என்பது புலனாகிறது. அத்தோடு அவற்றுக்கான பல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த இலங்கைத் தமிழ் மொழிக்கட்டுக்கான நியம பெயர் : ta-LK / ta_lk

இன்று :
Joomla 1.5.2
Moodle 1.8+
Mozilla Firefox
Mozilla Thunderbird
ஆகியவற்றுக்கான இலங்கைத் தமிழ்மொழிக்கட்டுகள் கிடைக்கக்கூடியதாக இருக்கின்றன. இந்த மொழிக்கட்டுகளின் தயாரிப்பில் நானும் பங்குபற்றியிருக்கிறேன் என்பதைப் பெருமையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
இனிவருங்காலங்களில் நாம் மேலும்பல மென்பொருள்களை இலங்கைத் தமிழ் மொழிக்கட்டுடன் எதிர்பார்க்கலாம். யாராவது இம்முயற்சியில் ஈடுபட விரும்பின் என்னாலான பங்களிப்பை செய்யவும் தயாராக இருக்கிறேன்.

இலங்கை அரசகரும மொழிகள் திணைக்களத்தின் கலைச்சொற் களஞ்சியம்

இக்கலைக்களஞ்சியம் 2000ம் ஆண்டளவில் பேராசிரியர் கா.சிவத்தம்பி தலைமையிலான குழுவினரால் தயாரித்து வெளியிடப்பட்டது.
இதன் முக்கியத்தும் என்னவெனில், இது இந்திய மற்றும் இலங்கை அறிஞர்களின் ஒரு கூட்டுத்தயாரிப்பாகும். இந்த கலைச்சொற்களஞ்சியத்தில் பல இந்திய அறிஞர்களும் பணியாற்றியிருப்பதுடன் இக் களஞ்சியத்தில் சிலசொற்களுக்கு இந்திய வழக்கு / இலங்கை வழக்கு என்று தனித்தனியாக சொங்கள் தரப்பட்டிருப்பதையும் காணலாம்.
இந்தக் கலைச்சொற்களஞ்சியத்தில் சில சொற்களுக்கான மொழிபெயர்ப்புகள், சரியாகக் கணினியறிவு உள்வாங்கப்படாமல், ஆங்கில-தமிழ் அகரமுதலி மொழிபெயர்ப்புகளாகவே காணப்படுகின்றன என்பதை என்னால் சுட்டிக்காட்ட முடியாமல் இருக்கின்றன.
அதுமட்டுமல்லாமல், 2000 ஆண்டின் பின் ஏற்பட்டுள்ள இணையத்தின் வளர்ச்சி, கணினித்துறையின் எழுச்சி காரணமாக நிறைய புதிய விடயங்கள், சொற்கள் கணினித்துறையால் உள்வாங்கப்பட்டிருக்கின்றன.
இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு நாம் இந்த கலைச்சொற்களஞ்சியத்தை மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் மீள்பார்வைக்குட்படுத்தி வருகிறோம். இதை தற்போது LK Domain பதிவகத்தின் ஆதரவுடனும் இலங்கை அரச கரும மொழிகள் திணைக்களத்தின் ஆதரவுடனும் சில தன்னார்வலர்கள் ஒன்றுகூடி இதனைச் செய்துவருகிறோம்.

Wednesday, March 12, 2008

Localization / Localisation - தமிழ்ப் பதம் என்ன?

Localization / Localisation என்பதற்குப் பின்வரும் தமிழ்ப் பதங்களை நாம் கவனத்திற் கொள்ளலாம் :
1. குழுமயப்படுத்தல்
2. உள்ளூராக்கல்

Localization / Localisation எனப்படுவது, இடம், மொழி, கலாசாரம், பண்பாடு... போன்ற எல்லாவற்றையும் உள்ளடக்கியதான செயற்பாடு. எனவே ஒரு இடத்தை வைத்தோ, மொழியை வைத்தோ Localization / Localisation இற்கான தமிழ்ப் பதத்தை வரையறுக்க முடியாது. பொதுவாகச் சொல்வதானால், Localization / Localisation என்பது ஒரு குழுவிற்காக ஒரு மென்பொருளை மாற்றுவதென்று பொருள்கொள்ளலாம். இக்குழு, ஒரு நாடாகவோ அல்லது ஒரு கிராமமாகவோ இருக்கலாம்.
அதனால், Localization / Localisation என்பதற்கு குழுமயப்படுத்தல் என்ற பதம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
பொதுவாக இந்த Localization / Localisation, குறித்த மொழியின் கலைச்சொற்களஞ்சியத்தினை அடிப்படையாகக் கொண்டே செய்யப்படுகின்றன.
இலங்கை மற்றும் இந்தியாவை எடுத்துக்கொண்டால், வெவ்வேறு கலைச்சொற் களஞ்சியங்கள் புழக்கத்திலுள்ளன. எனவே தமிழ் மொழியைப் பொறுத்தவரையில் இலங்கை மற்றும் இந்தியாவிற்காக வெவ்வேறான Localization / Localisation அவசியமாகிறது.

மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் குழுமயப்படுத்தல் செயற்பாடுகள்

இலங்கை மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில், ICTA மற்றும் LK Domain Registry இன் ஆதரவில் Mozilla Firefox, Mozilla Thunderbird, Moodle மற்றும் Joomla தமிழ் குழுமயப்படுத்தல் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
அத்தோடு மேற்குறிப்பிட்ட மென்பொருள்களுக்குரிய பயனாளர் கையேடுகளும் தயாரிக்கப்பட்டுள்ளன.
இது சம்பந்தமான மேலதிக விடயங்களை நீங்கள் www.lakapps.lk என்ற இணையத்தளத்தில் காணலாம்.

Tuesday, March 4, 2008

Mozilla Firefox உம் தமிழும்

சில வேளைகளில் நீங்கள் Firefox இல் தமிழ் இணையத்தளங்களைப் பார்க்க முற்படு்ம்போது தமிழ் எழுத்துக்கள் சிதைந்து தென்படலாம்...
இப்பிரச்சினையை நீங்கள் இந்த மீ-இணைப்பில் உள்ள உதவிக்குறிப்புகளின் மூலம் தீர்த்துக்கொள்ளலாம்.

Saturday, March 1, 2008

கணினியும் தமிழும்

இக்குறிப்பேட்டில் கணினியைத் தமிழ்ப்படுத்துதல் சம்பந்தமான முயற்சிகள் மற்றும் அதன்போது எழும் பிரச்சினைகள் சம்பந்தமான தகவல்களைத் தரமுயல்கிறேன்.