Monday, June 30, 2008

தமிழிலான இணைய முகவரிகள்

நாம் தமிழில் URL ஐ (IDN) அறிமுகப்படுத்துவதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறோம். இதன் முதல் அங்கமாக, '.lk' என்பதை எப்படித் தமிழில் எழுதலாம் என்பதில் கவனஞ்செலுத்தி வருகிறோம்.
நாம் யோசித்தளவில்
1.இல
2.இலங்கை
3.இகை போன்றவை கிடைத்திருக்கின்றன. நாம் இவற்றில் இருந்து ஏதாவது ஒன்றைத் தெரிவுசெய்யவேண்டிய கட்டாயத்தில் இன்று இருக்கிறோம்.

இதுதொடர்பாக உங்களின் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறோம். நீங்கள் மேற்குறிப்பி்ட்ட மூன்றில் எதனைத் தெரிவுசெய்வீர்கள்? அல்லது அவற்றைவிடச் சிறந்த வேறு ஏதாவது ஒன்றை முன்மொழிய முடியுமா?
நாம் இதனைத் தீர்மானிப்பதற்கு 2 விடயங்களைக் கவனத்தில் கொண்டால்போதும்.

1. அச்சொல்லு 6 Key strokes க்கும் குறைவானதாக இருக்கவேண்டும் (Unicode வடிவத்தில்). உதாரணமாக, இலங்கை = இ ல ங ் ​​ை க = 6
2. ஈழம் என்ற சொல் தவிர்க்கப்படவேண்டியதாயிருக்கிறது (ஏன் என்று என்னை வையாதீர்கள் :-( )

உங்களுடைய தாழ்மையான ஆலோசனைகளை விரைவாக எதிர்பார்க்கிறோம். கருத்துக்களுக்கு மொழி தடைவில்லை, நீங்கள் ஆங்கிலத்திலும் எழுதலாம்.

/சர்வேஸ்

Sunday, June 22, 2008

தமிழிலான Firefox 3.0

நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கலாம், Firefox 3.0 Beta 2 பதிப்பிற்கான தமிழ் மொழிக்கட்டை Mozilla.org AMO (https://addons.mozilla.org/en-US/firefox/browse/type:3) இல் இலங்கைத் தமிழ் என்ற பகுதியிலிருந்து பதிவிறக்கிக்கொள்ளலாம். இன்று Firefox 3.0 இற்கான இறுதிப் பதிப்பிற்கான மொழிக்கட்டு வேலைகளும் ஒரளவு நிறைவுற்றிருக்கின்றன. அதனை இன்றும் இரண்டு நாட்களுக்குள் மேற்தரப்பட்ட இணைப்பினூடாகப் பெறலாம்.
Firefox 3.0 ஆனது இணைய உலாவிகள் மத்தியில் ஒரு பெரிய எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்பதில் இவ்வித ஐயமுமில்லை. இந்த இலவச திறந்த மூல மென்பொருள் இன்று பெரும்பாலன நாடுகளில் வரவேற்பைப் பெற்றுக்கொண்டுள்ளது.

Sunday, June 8, 2008

Joomla! 1.5.x மொழிக்கட்டு

Joomla! 1.5.x இற்கான Localization நிறைவடைந்துள்ளது. அதனை நீங்கள் இப்போது http://joomlacode.org/gf/project/j_l10n_ta_lk/ தளத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

Joomla! 1.5.x இற்கான
1. நிர்வாகம் (administration)
2. தளம் (site)
3. நிறுவல் (installation) போன்றவற்றிற்குத் தேவைப்படும் மொழிக்கட்டுகள் அனைத்துமே நிறைவடைந்துள்ளன.
நிறுவலுக்கான மொழிக்கட்டு Joomla! 1.5.x உடன் பெற்றுக்கொள்ளலாம்.
தளம் மற்றும் நிர்வாகத்திற்கான மொழிக்கட்டுகளை நீங்கள் மேலே தரப்பட்டுள்ள இணைப்புத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.


இது சம்பந்தமான உங்களின் ஆக்கபூர்வமான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.